பறவை கூண்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு.

0 484
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள வ உ சி நகரில் வீட்டில் வளர்த்து வரும் பறவைகள் கூண்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு.லால்குடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் ரோஸி. இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் கூண்டு வைத்து பறவைகளை வளர்த்து வருகிறார். இந்த கூண்டுகள் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது..பாம்பைக் கண்டு அதிர்சியடைந்த
ஆசிரியை ரோஸி லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலைய போக்குவரத்து சுரேஷ், சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் அசோக், சசிகுமார், விஜய் அமிர்தராஜ்,பிரபு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் சாரை பம்பை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அங்குள்ள வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.