ஈச்சம்பட்டியில் நாட்டு நல பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் நிறைவு

0 303
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் திருப்பைஞ்சீலி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவ மாணவிகள் 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.

திருப்பைஞ்சீலி அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவிகள் கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஏழு நாட்கள் சிறப்பு முகாம் ஈச்சம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் நாட்டு நாட்டு நலப் பணி திட்ட மாணவ, மாணவிகள் நலவாழ்வு,ஆலய உழவாரப்பணி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, எய்ட்ஸ் மைதானம் செப்பணிடுதல், மகளிர் கல்வி, மரக்கன்றுகள் நடுதல், பாதை செப்பணிடுதல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு களப்பணிகள் ஆற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த சிறப்பு முகாமின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருப்பைஞ்சீலி அரசு பள்ளி மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திருமதி விஜயசக்தி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் திருமதி சவிதா திட்ட அறிக்கை வாசித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகம் திருப்பைஞ்சீலி ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பட்டதாரி ஆசிரியர் சேவியர் ஜெயசீலன் பெற்றோர் கல்வியாளர் கழகம் செல்வம் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் திருமதி சந்திரகலா வாழ்த்துரை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.