சேவை கரங்கள் அறக்கட்டளை சார்பாக குழந்தைகளின் தின விழா

0 344
Stalin trichy visit

சர்வீஸ் ஹண்ஸ் ( சேவை கரங்கள்) அறக்கட்டளை சார்பாக
நேற்று 14.11.2022 எடமலைப்பட்டி புதூரில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில்
குழந்தைகளின் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி,ஓவியப்போட்டி, கதை சொல்லுதல் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற்றது.குழந்தைகளுக்கு கேடையம், சான்றிதழ் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் சத்தியமூர்த்தி எம்டி மற்றும் லதா சத்தியமூர்த்தி துணை நிறுவனர்,பாலசுப்பிரமணியன் சாப்ட்வேர் இன்ஜினியர்,மற்றும் ரவி ஆகியோர் கலந்துகொண்டு பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள். மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு போட்டிகளில் ஈடுப்பட்டனர். மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காக சர்வீஸ் ஹண்ஸ் ( சேவை கரங்கள்) அறக்கட்டளை தமது சேவைகள் செய்து வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.