கஞ்சா விற்பனை செய்தவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

0 320
Stalin trichy visit

திருச்சி, நவ.19 திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இளஞ்சிறார்களை சீராழிக்கும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர் மற்றும் விற்பனைக்காக பதிக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 06.11.22- ஆம் தேதி மனித உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெரியவர் மற்றும் சிறுவர்களுக்கு விற்பனை செய்ய அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 22 கிலோ கிராம் (மதிப்பு ரூ.20,000/-) புகையிலை போதை பொருள்களை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, காமராஜ் நகரை சேர்ந்த எதிரி அன்புரோஸ்(22) மற்றும் பூமிநாதன் (40), ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணையில் எதிரி அன்புரோஸ் மீது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், பூமிநாதன் மீது பாலக்கரை காவல்நிலையத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவேஅன்புரோஸ் மற்றும் பூமிநாதன் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெரியவர் மற்றும் சிறுவர்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.