திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோவிலில் பிரசாதம் விற்கும் உரிமத்துக்கான ஏலம் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது என கோவில் செயல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
மலைக்கோட்டையில் உள்ள மாணிக்க விநாயகர் சன்னதி உற்சவர் மண்டபத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி நண்பகல் 12:00 மணிக்கு பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி திறப்பு நடைபெறவுள்ளதுக. இதில் சிறு தேங்காய் சேகரிக்கும் உரிமம், மாணிக்க விநாயகர் சன்னதி மண்டபத்தில் ஒரு பிரசாத கடையும், உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் கோவில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் ஒரு பிரசாத கடையும் நடத்திக்கொள்ள உரிமம் கோரப்படுகிறது. ரூபாய் 500 செலுத்தி ஒப்பந்தப்புள்ளி படிவத்தை பெற்று நிறைவு செய்து செப்டம்பர் 6ஆம் தேதி காலை 11.30 மணிக்குள் அளிக்கலாம் எனவும், மேலும் விவரங்களுக்கு கோவில் அலுவலகத்தை அணுகலாம் என கோவில் செயல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.