மயங்கிக் கிடந்த முதியவர் உயிரிழந்தார்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஊட்டத்தூர் நம்புக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள பறையநேறி பகுதியில் மயங்கிக் கிடந்த முதியவர் உயிரிழந்தார்.
புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கருடமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் 62 வயதான முத்துசாமி. விவசாயியான இவர் ஊட்டத்தூரில் தங்கியுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை நம்புக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள பறையநேறி பகுதியில் மயங்கிக் கிடந்தார்.இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.