பள்ளிவாசல் பாங்கு சப்தம் கேட்டு 3 நிமிடம் பேச்சை நிறுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

0 361
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பேச தொடங்கிய சில நிமிடங்களில் அருகில் உள்ள பள்ளி வாசலில் இருந்து தொழுகைக்கான பாங்கு சப்தம் கேட்டது. இதை கேட்ட அடுத்த நொடியே அமைச்சர் அன்பில் பேச்சை நிறுத்து விட்டு 3 நிமிடம் அமைதியாக இருந்தார். அப்போது அந்த பகுதியே அமைதியாக இருந்த நிலையில் பாங்கு சொல்லி முடித்ததும் மீண்டும் பேச்சை தொடங்கினார். அப்போது நினைவுகளை பகிர்ந்த அவர் நான் அன்பழகன் க்கு கொடுத்த காலண்டர் இன்னும் அவரின் வீட்டில் உள்ளது. அந்த பாக்கியமே சிறப்பு தான் என்று நெகிழ்ந்து பேசினார்.
கூட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.