பொதுமக்களுக்கு காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு

0 366
Stalin trichy visit

திருச்சி, டிச.21 திருச்சி மாநகரில் சமீப காலமாக ஓடும் பேருந்தில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள், இணையதள மோசடி, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் போன்றவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாநகர காவல்துறையினர் குற்றங்களை தடுக்க எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மாற்று திட்டங்களை தீட்டி தங்கள் தொழிலை தொடர்கிறார்கள். இந்தநிலையில் திருச்சி மாநகர தீவிர குற்றத்தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் கருணாகரன், தற்போது பாலக்கரை காவல்நிலையத்தில் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் பாலக்கரை வழியாக செல்லும் பேருந்துகளை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி, பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதுதொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.