மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 265
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினரும், கழக இலக்கிய அணி புரவலருமான ந.செந்தில்  தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காந்தி சாலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல தரமான தார்சாலை அமைத்து கொடுத்ததற்காக அந்த சாலையில் வசிக்கும் மக்கள் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்திலுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்து தங்களது நன்றியினை தெரிவித்தார்கள், மேலும் தனது வார்டு மக்களுக்காக இன்னும் நிறைய செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழியில் காத்துக் கொண்டு இருப்பதாக சொல்லி ஏற்புரை ஆற்றினார்.

தொடர்ந்து  தெற்கு காட்டூர் அரசரடி விநாயகர் கோயில் தெருவில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதையும், பர்மா காலனி நேரு தெருவில் சாலைப் போடும் பணியையும்,  பர்மா காலனி காந்தி தெருவில் சாலைப் போடும் பணியையும், பர்மா காலனி பூங்கா அருகில் தெரு விளக்கு சரி செய்த பணியையும், பர்மா காலனியில் தண்ணீர் சரியாக வராமல் இருப்பதை பொது மக்கள் தெரிவித்ததையும்  மாமன்ற உறுப்பினர் செந்தில் கேட்டறிந்தார் உடன்   கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.