காற்று மாசு இல்லாத புத்தாண்டையை கொண்டாடுவோம்
புத்தாண்டு, திருவிழா போன்ற கொண்டாட்டத்தை இரவு நேரத்தில் அதிக சத்தமில்லாத வெடிகளை வெடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்ணீர் அமைப்பு, மற்றும் மக்கள் சக்தி இயக்க கேட்டுக் கொள்கிறது.
தீபாவளிப் பண்டிகையின் போது இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு
வெடிக்க வேண்டும் என்று 2018- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட் டது. இந்த உத்தரவின்படி தமிழகத்தில் காலை ஆறு மணி முதல் எழு மணி வரை. இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
சென்னை நகரில் காற்று மாசு வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்தது. மற்ற ஊர்களிலும் காற்று மிகவும் மாசடைந்தது. பிற மாநிலங்களிலும் இதே நிலை தான். தலைநகர் தில்லியில் ஏற்கெனவே காற்று மாசு அதிகம். அங்கு பள்ளி செல்லும் குழந்தைகள் கூடக் காற்று மாசிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முகக்கவசம் அணிந்து செல்வது வழக்கமாகி விட்டது.
முன்னர், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடித்தது போய் இப்போது பண்டிகை , சாவு, திருமணம், திரைப்படம், அரசியல், ஆன்மிகம் என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிக்கும் கலாசாரம் வந்து விட்டது.
தீபாவளியன்று வெடிப்பதற்கு மட்டும் தான் நீதிமன்றம் நேரக் கட்டுபாடு நிர்ணயித்திருக்கிறது.
புத்தாண்டு, கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் இரவு நேரத்தில் கட்டுப்பாடுகளை மீறி வெடிக்கிறார்களே,
சிறு குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் இவர்களெல்லாம் பட்டாசுச் சத்தத்தால் எவ்வளவு துன்பம் அடைகிறார்கள் என்று? வீடுகளிலுள்ள வளர்ப்புப் பிராணிகள் சத்தம் கேட்டுப் பயந்து நடுங்குகின்றன என்று? மரங்களில் வாழும் பறவைகளெல்லாம் அஞ்சித் துடிக்கின்றன என்று தெரிகிறதா என தெரியவில்லை,
காசு கொடுத்துப் பட்டாசு வாங்கி வெடித்து காற்றைக் கெடுப்பதோடு, நம் உடல் நலத்துக்கு கேடு விளைவித்துக் கொள்கிறது.
வயதானவர்கள், சிறு குழந்தைகள், நோயாளிகள், வளர்ப்பு பிராணிகள், விலங்குகள், பறவைகள் போன்றவைகள் பாதிக்கபடுவதோடு, காற்று மாசு அடைகிறது.
எனவே அரசு, புத்தாண்டு, திருவிழா போன்ற நிகழ்ச்சியாவது இரவு 8.00 மணிக்கு வெடிகளை வெடிக்க தடை விதிக்க வேண்டும் என தண்ணீர் அனமப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்க சார்பில் கேட்டுக் கொள்கிறோம் .