மாநகராட்சி கூட்டத்தில் அன்பில் தர்மலிங்கத்திற்கு புகழாராம்

0 545
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியில்   மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் பேசும் போது,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வழிகாட்டுதல் படி இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் நேற்றைய தினம் திருச்சிக்கு மாவட்டத்திற்கு வருகைப் புரிந்த மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவராய், சமூக நீதிக்கான தலைவராய், சுயமரியாதை இயக்கத்தின் தலைவராய், திராவிட மாடல் ஆட்சியை வழங்கி கொண்டிருக்கும் நம் கழகத் தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், இளைஞர்களின் இளஞ்சூரியன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மாண்புமிகு இளைஞர் அணி செயலாளர் அவர்களையும் அழைத்து வந்து திருச்சி மக்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் நலத் திட்டங்கள் வழங்குவதற்கு அடித்தளமாக இருந்த கழகத்தின் முதன்மை செயலாளரும் நிர்வாகத் துறை அமைச்சருக்கும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது வார்டு மக்களின் சார்பாகவும் வரலாற்று சிறப்புமிக்க இந்த மாமன்றத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்,

மேலும் கடந்த கால வரலாற்றை நாம் பின்னோக்கி பார்த்தோம் என்று சொன்னால் தமிழகத்திலே நமது கழக அரசு ஆட்சியில் இருந்த போது ஒருங்கிணைந்த மாவட்டக் கழக செயலாளராக இருந்த  அன்பில் தர்மலிங்கம் மற்றும்  கழக முதன்மை செயலாளரும் நிறைய நிதியை பெற்று தந்து திருச்சியை வளர்ச்சி பெற்ற ஒரு மாவட்டமாக உருவாக்கி உள்ளார்கள், அந்த வழியில் இன்றும் மிகவும் பலம் வாய்ந்த அமைச்சராக எங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நிறைய நிதியை பெற்று தர தயாராக இருக்கிறார்கள்,இதனை கனிவோடு மாநகரத்தின் தந்தை அவர்கள் பெற்று திருச்சி மாநகராட்சியை பலப்படுத்தவும், வளப்படுத்தும், வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.