திருச்சி கோட்டத்திற்கு 2 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முதல் இயக்கம்

0 546
Stalin trichy visit

தென்னக ரெயில்வே முன்பதிவு செய்யப்படாத 5 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் இயங்க தொடங்கும். இதில் திருச்சி கோட்டத்திற்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சி-காரைக்கால், மயிலாடுதுறை-திருவாரூர், எர்ணாகுளம்- கொல்லம், கண்ணூர்-மங்களுரு, மதுரை-செங்கோட்டை ஆகிய 5 வழித்தடங்களில் இரு மார்க்கத்திலும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருச்சியில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், தஞ்சை திருவாரூர், நாகை வழியாக காரைக்காலுக்கு காலை 10.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் காரைக்காலில் இருந்து தினமும் மதியம் 3 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், நாகை, திருவாரூர், தஞ்சை வழியாக திருச்சியை இரவு 7.50 மணிக்கு வந்தடையும்.
இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் காலை 6.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், பேரளம், நன்னிலம் வழியாக திருவாரூரை காலை 7.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் திருவாரூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் இரவு 8.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், நன்னிலம், பேரளம் வழியாக மயிலாடுதுறையை இரவு 9.15 மணிக்கு சென்றடையும்.

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் சென்று கொண்டிருக்கும் சிறப்பு ரெயில் நிறுத்தங்கள் இருமார்க்கத்திலும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதால் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்லிக்காவல், திருத்துறைபூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அய்யன்குடி, அறந்தாங்கி, பெரியகோட்டை, வழியாக காரைக்குடிக்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.இதேபோல் மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூருக்கு இரவு 8.10 மணிக்கு சென்றடையும்.

Leave A Reply

Your email address will not be published.