மணக்காலில் தொலைநோக்கி மூலம் வான்நோக்குதல் நிகழ்ச்சி

0 430
Stalin trichy visit

மணக்காலில் வானில் உள்ள கோள்களை 500 க்கும் மேற்பட்டோர் தொலைநோக்கி மூலம் பார்வையிட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்காலில் உள்ள தென் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் வானில் உள்ள கோள்களை தொலைநோக்கி மூலம் மாணவ மாணவிகள் காணும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் குழந்தைகள் 300க்கும் மேற்பட்ட பெரியோர்கள் கோள்களை தொலைநோக்கி மூலம் பார்வையிட்டனர்

மணக்காலில் உள்ள தென்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் லால்குடி இயற்கை விழுதுகள்,என் எம் சி அஸ்ட்ரோ கிளப் திருச்சி அஸ்ட்ரோ கிளப் மற்றும் சங்கம் சில்க்ஸ் இணைந்து லால்குடியில் முதன்முறையாக வானில் உள்ள கோள்களை தொலைநோக்கி வழியாக காணும் நிகழ்ச்சி நேற்று மாலை ஆறு மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது
4 கோள்கள் பூமிக்கு அருகில் வருகின்ற காட்சிகளை தொலைநோக்கி வழியாக 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் குழந்தைகளும் 300-க்கும் மேற்பட்ட பெரியவர்களும் கோள்களை பார்வையிட்டனர் நான்கு கோள்கள் எதிர்பார்த்த நிலையில் ஐந்தாவது கோளும் காட்சியளித்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.