மணப்பாறை அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பி கைது

0 411
Stalin trichy visit

திருச்சி மின்வாரிய சாலை டவுன் ஸ்டேசன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(28). இவரது சகோதரர் பாபு. இருவரும் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இதேபோல் பீகார் மாநிலம், சூபோல் மாவட்டம், குடிட்யமேகே பகுதியைச் சேர்ந்த விஜயராம்(32), அவரது சகோதரர் ராம்தேவ்(30) ஆகியோரும் அதே தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி ஆலை அருகே அனைவரும் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி தங்கும் இடத்திற்கு சென்ற போது விஜயராம்–கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே அவர்களின் தம்பிகளும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அது கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் விஜயராம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் உடல்நிலை சரியாகததால் மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாபு அளித்திருந்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றி தாக்குதல் நடத்திய விஜயராம் மற்றும் அவரது சகோதரர் ராம்தேவ் ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.