திருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
திருச்சி பீமநகர் ராஜா காலணி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று(15. 02. 2023)காலை அதிரடியாக தேசிய புலனாய்வுமுகமை அதிகாரிகள் சோதனை நடத்த நுழைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சேக் தாவூத் (34) வீட்டில் சோதனை காலை 6. 00 மணியிலிருந்து
துவக்கினர். இவர் சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் வீட்டிலிருந்து பணிபுரிகிறார். தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் ஹரி ஓம் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறு மாத காலமாக வாடகை வீட்டில் இவர் வசித்து வருகிறார்.
கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக இவரிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும்
(Fundamentalist) மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் ஈடுபட்டதாக தகவலும் வெளியாகியுள்ளது.