போக்குவரத்து விதிகள் – குழந்தைகள் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 441
Stalin trichy visit

திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு இணையவழி குற்றம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து பூங்காவில் இன்று (15.02.23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு, அமர்வு நீதிமன்ற காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராபீன்சன் ஆகியோர் பேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்சப் முதலிய சமூக ஊடகங்களில் இணையவழி குற்றங்களை தடுப்பதில் மாணவர்களின் பங்கு மற்றும் சைபர் க்ரைம் குறித்து இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் 2006, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012, குழந்தை வளரிளம் பருவ தொழிலாளர் முறையை அகற்றுதல் திருத்த சட்டம் 2016 மற்றும் போதை பொருள் பயன்படுத்துவதால் குழந்தைகள் உடலளவில், மன அளவில் ஏற்படும் பிரச்சனைகள் பாதிப்புகள் குறித்தும் இதை தடுப்பதில் அனைவரின் பங்கு குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா பொறுப்பாளர்கள் விமல்,கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.