மத்திய பேருந்து நிலையம், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்

0 532
Stalin trichy visit

திருச்சி, பிப்.16  திருச்சி 110 கே.வி.துணை மின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மத்திய பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ்ரோடு, ராயல்ரோடு, புராமினேட்ரோடு, கலெக்டர்ஆபீஸ்ரோடு பகுதிகள், வார்னர்ஸ்ரோடு, லாசன்ஸ்ரோடு, ரெனால்ட்ஸ்ரோடு, கண்டோன்மெண்ட் பகுதிகள், மேலப்புதூர், புதுக்கோட்டை ரோடு மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட்ரோடு, தலைமை தபால்நிலைய பகுதி, குட்ஷெட்ரோடு, முதலியார்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, வாலாஜாபஜார், பாண்டமங்கலம், வயலூர்ரோடு-வண்ணாரப்பேட்டை மற்றும் குமரன்நகர், சண்முகாநகர், ரெங்காநகர், உய்யகொண்டான்திருமலை, உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமாநகர், குழுமணிரோடு-நாச்சியார் கோவில் கருமண்டபம் இருபுறமும், பொன்னகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. தையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டிகாலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசுகாலனி, ஸ்டேட்பேங்க்காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜீவ்காந்திநகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ். நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு,பாரதி நகர், காமராஜ் நகர், ஜே,கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், ஆர்.எஸ்.புரம், காந்தி நகர், பெரியார் தெரு பகுதிகளில் அன்று காலை 9.45 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவல் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.