சமூக ஆர்வலருக்கு சிறந்த சமூக நல செயற்பாட்டாளர் விருது

0 286
Stalin trichy visit

அனாதை பிணங்களை மனைவி மகளுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர்க்கு சிறந்த சமூக நல செயற்பாட்டாளர் விருது

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் 75 ஆம் ஆண்டை முன்னிட்டு திருச்சி கிளை மக்கள் சேவை துறை சார்பில் சமூகநல செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி ராணா அரங்கில் நடைபெற்றது.  ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் திருச்சி கிளை தலைவர் முனைவர் ஹஜ் மொய்தீன் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு சிறந்த சமூக நல செயற்பாட்டாளர் விருதினை வழங்கினார். திருச்சி இரும்பு ஸ்டீல் வியாபாரிகள் சங்க இணைச்செயலாளர் காஜா மைதீன், ஹனிபா, அப்துல் சலாம்,ராணா ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மக்கள் சேவை துறை செயலர் நவஸ்கான் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.