சமையல் சிலிண்டர் விலை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் மத்திய அரசு அறிவித்துள்ள சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி புறநகர் மாவட்டம் லால்குடி ஒன்றியம் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு அறிவித்துள்ள சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து லால்குடி ரவுண்டானாவில் ஒன்றிய குழு துணை செயலாளர் தீபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லால்குடி ஒன்றிய செயலாளர் விசாலாட்சி கண்டன உரையாற்றினார். பொருளாளர் மணிமொழி நன்றி கூறினார் இந்நிகழ்வில் லால்குடி நகராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் சாரதா மற்றும் ஒன்றிய குழுவில் உள்ள அழகி, விமலா,ராணி, புஷ்பம், கலைச்செல்வி மற்றும் முன்னணி ஊழியர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.