தளுதாளப்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திற்கான பூமி பூஜை

0 313
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான கட்டிடத்திற்கு பூமி பூஜையில் எம்எல்ஏ கதிரவன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

தளுதாளப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு 2021- 22 ம் திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக  கட்டுமான கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ கதிரவன் பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்,

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSP.இளங்கோவன்,  மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள்  மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் KBA.செந்தில் கூட்டமைப்பு தலைவர் மணிகண்டன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் நித்தியாவெற்றி செல்வன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.