மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்

0 307
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும்  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என் நேரு ,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்ஆகியோர் இன்று (14.03.2023) வழங்கினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மண்டல இணை இயக்குநர்மு.சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.சந்திரமோகன், துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மகாராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதரணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன், மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.