நெஸ்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அகாடமிக் தினம்
திருச்சி மாவட்டம், லால்குடி அகிலாண்டேஷ்வரி நகரில் உள்ள நெஸ்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அகாடமிக் தினம் நடைபெற்றது.
நெஸ்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அகாடமிக் தினம்
பள்ளியின் நிர்வாக இயக்குநர் மரியவிக்டர் மற்றும் முதல்வர் திருமதி.ரித்,விக்டர் தலைமையில் நடைப்பெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை ஆசிரியைகள் வரவேற்று பேசினார்கள். இவ்விழாவில் பள்ளிக்குழந்தைகள், நடனம், பாடல் ,வினாடி வினா, திருக்குறள் ஒப்புவித்தல் ஆகியவற்றினை செய்து தங்களின் திறமைகள் வெளிக்காட்டினார்கள்.
இவ்விழாவில் ஆசிரியர்கள் , மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தினர் நன்றி கூறினார்கள் .