மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார நடைபயணம்
நம்பர் 1 டோல்கேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய பிரச்சார நடைபயணம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த பிரச்சார பயணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து இந்த பிரச்சாரப் பயணத்தை எம்எல்ஏ கதிரவன் தொடங்கி வைத்தார். அப்போது
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் அரிசி, பருப்பு, எண்ணெய் முதல் காய்கறி,பால் என்று அத்துனை உணவு பொருட்களின் உயர்வால் மக்களை நசுக்குவது,
ஜிஎஸ்டி வரியை போட்டு தொழில் செய்யும் வியாபாரிகளை உற்பத்தி நிறுவனங்களை தொழிலை விட்டு ஓட செய்தது
கருப்பு பணத்தை மீட்பதாக பண மதிப்பிழப்பை அமல்படுத்தி ஏழை,எளிய நாட்டு மக்களை வங்கி, ஏடிஎம் என அலையவிட்டு நடுத்தெருவில் நிற்க வைத்தது
கிராமப்புற பொருளாதாரத்தை காத்திட ஏழை,எளிய விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி அளிப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தின் நிதியை வெகுவாக குறைத்து திட்டத்தை முடக்கி வரும் மத்திய அரசு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து
பிரச்சார பயணத்தில் பொதுமக்கள் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் கூட்டணி கட்சிகளான திமுக, காங்கிரஸ்,விடுதலை சிறுத்தை கட்சிகள், உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.