2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

0 430
Stalin trichy visit

திருச்சி, மே 27 திருச்சி தில்லைநகர் வாமடத்தில் கடந்த மாதம் 17- ஆம் தேதி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் காவல்துறைக்கு தகவல் கூறியதாக நினைத்து அவரது இருசக்கர வாகனத்தை சிலர் தீ வைத்து எரித்தனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதேநாளன்று சாஸ்திரிரோட்டில் உள்ள தேநீர் அருகே சைக்கிளில் தையல்மிஷின் வைத்து தொழில் செய்யும் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.2 ஆயிரம் பறித்து கொண்டு 3 பேர் தப்பியதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிந்து தென்னூர் வாமடத்தை சேர்ந்த வீரப்பன் என்கிற ராஜ்குமார் (23), மாரியப்பன் (19), விக்னேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், ரவுடியான ராஜ்குமார் மீது கோட்டை, தில்லைநகர், உறையூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் காவல்துறைக்கு தகவல் கூறியதாக நினைத்து அவரது இருசக்கர வாகனத்தை எரித்து மிரட்டல் விடுத்த வழக்கு உள்பட 14 வழக்குகளும், மாரியப்பன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமார், மாரியப்பன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்ஆணையர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.