கண்மாயில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வைரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் -சுதாஆகியோரின் குழந்தைகள் லோகநாதன் வயது ( 12 )ஆறாம் வகுப்பு தருண் ஸ்ரீ வயது ( 8) இரண்டாம் வகுப்புபடித்து வரும் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஒளியமங்கலம் வட்டம் சேர்வைக்காரன்பட்டி வேளாங் கன்மாய்யில் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் .அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.