அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி, மே 27 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரத்துக்குட்பட்ட பகுதியில் கழக உறுப்பினர் சேர்க்கை முகாமினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தொடங்கி வைத்தார். இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் முன்வந்து உறுப்பினர் அட்டைக்கான தொகை தலா ரூபாய் 10.00 செலுத்தி விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.