அவசர உதவிக்கு திருச்சி- தஞ்சை சரக கொரோனா கட்டுப்பாடு அறை எண்கள் வெளியீடு

0 320
Stalin trichy visit

மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் மத்திய மண்டலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையை அமல்படுத்த அமைக்கப்பட்டுள்ள 97 சோதனை சாவடிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலாக்க காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் அவசர பிரச்சினைகளை தீர்க்கவும், உதவி செய்வதற்கும் மாவட்டத்தில் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி கொண்ட அறிவிப்பு பலகை ஒவ்வொரு சோதனை சாவடியிலும் வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எண்களில் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்களின் அவசர தேவைகள் மூலம் குறையும் நிவர்த்தி செய்து கொள்ளாம். அப்படி நிவாரணம் கிடைக்கப் பெறாதவர்கள் திருச்சி, தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை எண் முறையே திருச்சி சரகம் 0431 2333909, தஞ்சாவூர் சரகம் 04362 277577 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.