திருச்சி -ராமநாதபுரம் ரயில் மானாமதுரையுடன் நிறுத்தம்

0 530
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11 திருச்சி மதுரை கோட்டம் மானாமதுரை -ராமேசுவரம் பிரிவுக்கு உட்பட்ட சூடியூர்-பரமக்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரையும், மற்றும் 15- ஆம் தேதி, 17- ஆம் தேதி, முதல் 20- ஆம் தேதி வரையும், 22- ஆம் தேதி, 24- ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரையும், 29- ஆம் தேதியும் திருச்சி -ராமநாதபுரம்- திருச்சி ரயில் மானாமதுரை- ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, திருச்சியில் இருந்து தினமும் காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி -ராமநாதபுரம் முன்பதிவு இல்லாத விரைவுரயில் (வண்டி எண்:16849) மானாமதுரையுடன் நிறுத்தப்படுகிறது. அந்த ரயில் மேற்கண்ட நாட்களில் ராமநாதபுரம் செல்லாது. அதுபோல் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.35 மணிக்கு திருச்சிக்கு புறப்பட வேண்டிய ராமநாதபுரம்-திருச்சி முன்பதிவு இல்லாத விரைவு ரயில் ( வண்டி எண்:16850) ராமநாதபுரத்துக்கு பதிலாக மானாமதுரையில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

Leave A Reply

Your email address will not be published.