பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு

0 410
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 20 திருச்சி மாவட்டம்,  வளநாட்டை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள சீரங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிமுத்து. இவரது மகள் ஹன்சிகா (வயது 12). பழனிமுத்து வீட்டின் பின்புறம் பூச்செடிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஹன்சிகா அங்கு பூ பறிக்க சென்றார். அப்போது, பூச்செடியில் பதுங்கி இருந்த பாம்பு அவரை கடித்தது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு வளநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்ப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹன்சிகா சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.