சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

0 197
Stalin trichy visit

திருச்சி, ஆக.14  திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொளக்குடி கம்பளி மில் காலனி பகுதியில் தனது பெட்டிக்கடையில் விஜயேந்திரன் (40) என்பவரும், பண்ணப்பட்டி பகுதியில் வீட்டின் பின்புறம் காயாம்பு ( 35 ) என்பவரும் , அரசு மதுபானங்களை திருட்டுத்தனமாக பதுக்கி அதிக விலைக்கு விற்பதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தார். மேலும் இருவரிடமிருந்து தலா 5 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Leave A Reply

Your email address will not be published.