இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

0 286
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மால்வாய் கிராமத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண். இவர் 12 ம் வகுப்பு படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்துள்ளார். இளம் பெண் செல்போனில் அதிக நேரம் மூழ்கியுள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இளம் பெண் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசேதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினார். இது குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.