சாலையின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோட்டார் பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அனுகு சாலையில் உள்ள தடுப்பு கம்பிச் சுவர் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுகனூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் 53 வயதான ராமமூர்த்தி.இவர் டி.வி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாக மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனுகு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுகனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அணுகு சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பு தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தியை சிறுகனூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.