எம்.ஐ.டி வளாகத்தில் டேபிள் டென்னிஸ் போட்டி துவக்க விழா…

0 360
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி எம் ஐ டி கல்லூரி வளாகத்தில், திருச்சி மாவட்ட மேஜை பந்து வளர்ச்சி கழகமும் ,எம் ஐ டி கல்வி நிறுவனங்களும் இணைந்து மாவட்ட அளவிலான முதலாம் தகுதி நிர்ணய இரு நாள் போட்டிகள் துவங்கியது.

போட்டிகளை எம் ஐ டி கல்வி நிறுவன டீன் எம் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
எம் ஐ டி கல்வி நிறுவன முதல்வர்கள் ரஞ்சித் குமார், கலைவாணி, வரலட்சுமி மற்றும் ஜெய் ஸ்போர்ட்ஸ் அகடமி நிறுவனர் சப்தரிஷி முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் முன்னேற்ற கழக தலைவர் மேஜர் பொன்னுரத்தினம் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் சுகுமாரன் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.சர்வதேச நடுவர் பிரியதர்ஷினி, தேசிய நடுவர் நரேஷ் குமார் ஆகியோர் நடுவர்களாக போட்டிகளை நடத்தி வருகின்றனர். போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். நாளை மாலை இறுதி போட்டியும் ,பரிசளிப்பு விழாவும் மாலை 4.30 அளவில் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.