மத்திய மண்டலத்திலுள்ள பள்ளி முதல்வர்களுடன் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் ஆலோசனைக் கூட்டம்

0 724
Stalin trichy visit

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, கடந்த ஓராண்டாக இணைய வழி மூலம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் ஆன் லைன் மூலம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களில் சிலர் மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்து புகாரினை தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் மத்திய மண்டலத்தில் நடைபெறாத வண்ணம் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஆன் லைன் மூலமாக பாடங்களை நடத்தும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுடன் வே.பாலகிருஷ்ணன் நேற்று (7.6.21) காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தி பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் மத்திய மண்டலத்தில் உள்ள சுமார் 255 பள்ளிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இணைய வழி மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தும் அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி செயல்பட வேண்டுமென்றுநளவ உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் நடத்தப்படும் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரால் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினை சார்ந்த இருநபர்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் அந்த பதிவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவியர்கள் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எளிதாக அளித்திடும் வகையில் காவல்துறையின் உதவி எண்கள் பள்ளி நிர்வாகத்தினரால் மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்ட்ப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் காவல்துறையால் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ – மாணவிகள் எந்தவித அச்சமின்றி ஆன்லைன் வகுப்புகளில் பயில்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மத்திய மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை கையாளும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆன்லைன் மூலம் பயிலும் மாணவ – மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.