திருச்சி விமான நிலையத்தில் 159 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

0 265
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை 8.45 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் அவர் ஹேர்டையில் மறைத்து வைத்து 159 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் ஆகும். தொடர்ந்து காவல்துறையினர் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.