சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு ‘ரெட் ரன்’ மினி மாரத்தான்

0 255
Stalin trichy visit

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு ரெட் ரன் மினி மாரத்தான் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சி, செப்.9 சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ‘ரெட் ரன்’ மினி மாரத்தான் ஓட்டத்தினை திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மூலமாக மாவட்டந்தோறும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரால் துவக்கி வைக்கப்பட்ட மினி மாரத்தான் ஓட்டம் அரிஸ்டோ வளைவு, மன்னார்புரம் வளைவு, டி.வி.எஸ் டோல்கேட் வழியாக சென்று அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவு பெற்றது.
இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சுமார் 750 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாணவர், மாணவியர்கள் என்று தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000-, இரண்டாவது பரிசு ரூ.7,000- மூன்றாவது பரிசு ரூ.5,000- மற்றும் ஆறுதல் பரிசுகள் ரூ.1,000- வீதம் 13 நபர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு, மாவட்ட திட்ட மேலாளர் மணிவண்ணன், மாவட்ட மேற்பார்வையாளர் (எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு) புஷ்பலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.