மாவடிக்குளத்தில் ஆகாய தாமரையை அகற்றி தூர்வார கோரிக்கை

0 274
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்களில் உள்ள ஆகாய தாமரையை அகற்றி தூர் வார வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கோரிக்கை

திருச்சி மாவட்டத்திலுள்ள ஆறு, ஏரி, மற்றும் பெரும்பாலான குளங்களில் நீர் நிலைகளில் சாக்கடை நீர் கலப்பதால் ஆகாய தாமரை பரவி கிடக்கிறது. இவை நீரை அதிகஅளவில் உறிஞ்சி நீர்நிலைகளின் தன்மையை அழித்து விடுகிறது. இதனால் விவசாயத்திற்கு நீர்நிலைகளால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுகிறது. ஆகாய தாமரை, உயிர்வாழ தண்ணீரை எளிதில் ஆவியாக்கி நீர்நிலையை வறண்டு போக வைத்து விடுகிறது. இந்த நிலையை மாற்றி நீர்நிலைகளில் உள்ள ஆகாய தாமரைகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முற்றிலுமாக அப்புறப்படுத்தவேண்டும் என்று மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.