ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபர் மறைவு: அமைச்சர் அன்பில்மகேஸ் மாலை அணவித்து மரியாதை

0 362
Stalin trichy visit

திருச்சி, அக். 14  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும் முதல்வரும்மான முனைவர் ஜான் பிரிட்டோ நேற்று இயற்கை எய்தினார். (78) நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, நேன்று மாலை 5.15 மணி அளவில் மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார் இந்தச் செய்தியை அறிந்ததும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் புனிதசெயின்ட் ஜோசப்கல்லூரிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருஉடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி,  இயேசு சபையின்
அருட் சகோதரர்களுக்கும் கல்லூரியின் பேராசிரியர் மாணவர்கள் ஆகியோருக்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டார் உடன் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் மோகன் ஆகியோர் இருந்தனர்‌

Leave A Reply

Your email address will not be published.