எம்.எல்.ஏ. பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய தி.மு.க. இளைஞரணி

0 457
Stalin trichy visit

 

திருச்சி, அக். 14  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ கதிரவனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி,விருந்தளித்து கொண்டாடிய திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக திமுக சார்பில் போட்டியிட்டு 59 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் கதிரவன். இவர் வெற்றி பெற்றது முதல் தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு கட்ட பணிகளை முன்னெடுத்துச் சென்றார்.மேலும் வேற்றுமை பாராமல் தொகுதி மக்களின் அனைத்து இல்ல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மக்களின் மனதை வென்றார்.
வாரத்தில் 2 நாட்கள் சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களையும்,நிர்வாகிகளையும் சந்தித்து அவர்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு நிறைவேற்றித் தருகிறார் .பொதுமக்கள்,திமுக நிர்வாகிகளின் மனதில் நிரந்தர இடம் பிடித்த எம்எல்ஏ கதிரவனின் பிறந்தநாளை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் திருச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மருதுசேகர் அவர்கள் ஏற்பாட்டில் பள்ளி மாணவ,மாணவிகளின் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து 1000 மேற்பட்ட பொதுமக்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் விருந்து அளித்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் மனோகரன், பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார், நகர கழக நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், இளைஞர் அணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.