ரயில்வே தொழிற்சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக். 20 ரயில்வே தொழிற்சங்கத்தினர், பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரயில்வே தொழிலாளர்களுக்கான உத்தரவாதம் இல்லாத புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாகவும், நிலுவையிலுள்ள 18 மாத பஞ்ச படியை உடனடியாக அரியர்ஸாக வழங்கிடவும், பணிமனைகளில் தனியார்மயம் கண்டித்து ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக பெருந்திரள் ஆர்பாட்டம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு எஸ்.ஆர்.ஈ.எஸ் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்மலை எஸ்.ஆர்.ஈ.எஸ் தொழிற்சங்க பணிமனைகோட்ட தலைவர் எல். பவுல் ரெக்ஸ் தலைமை வகித்தார், துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ரகுபதி முன்னி வகித்தார். இதில் நிர்வாகிகள் பாலமுருகன், ஆசைதம்பி, ஞானசேகர், கோரி முகமது, சாம்சன், செல்வகுமார், ஜோசப் சேகர்,மதன்குமார், சிதம்பரம், வெங்கட் நாராயணன், சீனிவாசன், சேசுராஜா, ஜார்ஜ் ஸ்டீபன், சுந்தர்ராஜன், சுந்தர் மற்றும் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.