பங்காரு அடிகள் மறைவு : அமைச்சர் அன்பில்மகேஸ் இரங்கல்

0 217
Stalin trichy visit

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆலய வழிபாட்டை சமத்துவமாக்கி ஆன்மீகப் புரட்சி செய்த ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார்  மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது! 2016-ஆம் ஆண்டு முதன்முதலாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட்ட போது என்னை வாழ்த்தி அனுப்பிய பெரியவர்களில் ஒருவர் பங்காரு அடிகளார்

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக சேவைகளையும் வழங்கி வந்த திரு.பங்காரு அடிகளார் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.