4 ஏக்கரில் ஒரே நேரத்தில் நெல் நடவு செய்து உலக சாதனை

0 386
Stalin trichy visit

முசிறி அருகே 2000 மாணவ மாணவிகள் 4 ஏக்கரில் ஒரே நேரத்தில் நெல் நடவு செய்து உலக சாதனை படைத்தனர்

நீரின்றி அமையாது உலகு என என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப புவியில் விவசாயம் இன்றியும் உலகம் அமையாது என்பதை உணர்தும் வகையில் நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாகவே மாறி விடுவாய் என உரைத்த விவேகானந்தரின் கூற்றுப்படி வயலில் சேரு மிதித்து விவசாயிகளாக மாறிய கல்லூரி மாணவ மாணவிகள் செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
முசிறி அருகே உள்ள விவசாய கல்லூரி மாணவ மாணவிகள் 2000 பேர் ஒன்று சேர்ந்து சேற்றில் இறங்கி நாற்று நட்டு விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் அத்தகைய நிகழ்வு திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள எம் ஐ டி வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது.
காலை நேரத்தில் வயலில் இறங்கிய எம் ஐ டி கல்வி நிறுவனத்தில் பயிலும் வேளாண்மை, பாலிடெக்னிக் உள்ளிட்ட பல் துறை மாணவர்கள் நாற்றை பறித்து கத்தையாக கட்டி வயல் நடவு செய்வதற்கு ஏற்றவாறு போட்டு வைத்தனர். பின்னர் 2000 மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் நெல் நாற்று நடவு செய்து சாதனை பட்டியலில் இடம் பெற்றனர்.
சாதனை நிகழ்ச்சிக்கு எம்ஐ டி கல்வி குழுமங்களின் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்து நெல் நாற்று நடும் பணியை துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து 4 ஏக்கர் பரப்பளவில் 2000 மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரத்திற்குள்
நாற்று நட்டனர்.
கல்லூரியின் துணைத் தலைவர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார்.
அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல் படும் ஐன்ஸ்டின் உலக சாதனை விருது வழங்கும் நிறுவனத்தின் அமைப்பாளர் கார்திக்குமார், இயக்குனர் மோனிகா ரோஷினி மற்றும் புதுமை தமிழச்சி அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதேவி சிவானந்தம் ஆகியோர் சாதனை நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு குறித்து கல்லூரி மாணவி
காவ்யசெல்வி என்பவர் கூறும் போது உலக உணவு தினத்தை முன்னிட்டு முசிறி எம் ஐ டி கல்வி நிறுவனத்தின் சார்பில் உணவுகளை வீணடிக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஒரே நேரத்தில் 2000 மாணவர்கள் நெல் நாற்று நடவு செய்துள்ளோம். இதனை ஐன்ஸ்டின்
சாதனை விருது நிறுவனம் உலக சாதனையாக அங்கீகாரம் செய்து விருது வழங்கியுள்ளது. விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நெல் நாற்று நடவு செய்த அனைவரும் உணவின் அவசியத்தையும், பாதுகாப்பையும் உணர ஒரு வாய்ப்பாக அமைந்தது. உணவை உற்பத்தி செய்வது விவசாயிக்கு எவ்வளவு கடினமானது என்பதை மாணவிகள் உணர்ந்துள்ளோம். இதுபோன்ற சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமைக்குரிய நிகழ்வாக கருதுகிறோம் என்று கூறினார். நாற்று நடவு முடிந்த பின்னர் முசிறி எம் ஐ டி கல்வி நிறுவனங்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் ஐன்ஸ்டின் உலக சாதனை நிறுவனம் விருது பதக்கம் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கியது. படிப்புகள் எத்தனையோ இருக்க இருக்க உணவளிக்கும் விவசாயத் தொழில் உன்னதமானது என்பதை உணர்ந்த மாணவ மாணவிகள் வேளாண் படிப்பை கையில் எடுத்துள்ள நிலையில் உணவின் அவசியத்தையும் விவசாயத்தில் உள்ள சிரமங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் நெல் நாற்று நடவு நிகழ்ச்சி நடைபெற்றதும் அந்த நிகழ்வு ஒரு சாதனை நிகழ்வாக பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது

Leave A Reply

Your email address will not be published.