திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

0 317
Stalin trichy visit

திருச்சி, அக். 26 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சிறீரங்கம் -மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண்:1,2,3 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மின்வினியோகம் இருக்காது. இதனால், நாளை (வெள்ளிக்கிழமை) குடிநீர் வினியோகம் திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் இருக்காது. எனவே பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.