சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம்

0 288
Stalin trichy visit

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட வேண்டும் அரசு துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், தமிழ்நாடுசத்துணவு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.