பிரணவ் ஜுவல்லரி மோசடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0 313
Stalin trichy visit

திருச்சி பிரணவ் ஜுவல்லரியின் நூதன மோசடியை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்பின், ஆருத்ரா, நியோ மேக்ஸ், பிரணவ் எனதொடரும் பல ஆயிரம் கோடி நிதி நிறுவன மோசடி செய்யும்கவர்ச்சிகரமான விளம்பரம் தரும் சீட்டு. நகைச்சீட்டு, நிதி நிறுவனங்களை காவல்துறை மூலம் கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்கள் முதலீட்டை பாதுகாக்க சட்டம் இயற்றிபொதுமக்கள் இழந்த பணத்தை மீட்கஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசடிக்கு உடந்தையாக செயல்படுவோரைகண்டறிந்து கைது செய்ய வேண்டும்.
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்.

Leave A Reply

Your email address will not be published.