அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

0 406
Stalin trichy visit

வந்தலை கூடலூரில் அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னால் எம்.பி பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அருகே வந்தலைக்
கூடலூரில் அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னால் எம்.பி பங்கேற்று உரையாற்றினார்.

கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றியம்,
வந்தலை கூடலூர் ஊராட்சியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் எம்பியுமான ப.குமார்
பங்கேற்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியையும், எழுச்சியையும் பற்றி விளக்கி கூறினார்.
மேலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் அவல நிலையை எடுத்து கூறி,வாக்களித்த மகளிரை தகுதி பார்த்து வஞ்சித்த திமுக.வை புறந்தள்ளி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கழக வேட்பாளர் அமோக வெற்றிபெற கழகத்தினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்கு வித்திட வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.

மேலும் தலைமை கழக பேச்சாளர் நடிகர், இயக்குனர்ரெங்கநாதன் உரையாற்றினார்.

இக்கூட்டத்தில்
புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர்
சிவக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மாவட்ட அவைத்தலைவர்
அருணகிரி,லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன்,வடக்கு ஒன்றிய செயலாளர்அசோகன்,நகர செயலாளர் பொன்னி சேகர்,பேரூர் கழக செயலாளர்கள் ஜேக்கப் அருள்ராஜ்,ஜெயசீலன்,பிச்சை பிள்ளை,மாவட்ட பாசறை செயலாளர்
.அருண்நேரு,மாவட்ட மகளீர் அணி செயலாளர் திருமதிசெல்வமேரி ஜார்ஜ்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார்,பொதுக்குழு உறுப்பினர் திருமதி. விஜயா,மாவட்ட MGR மன்ற செயலாளர் பாலன்
Ex கூட்டுறவு வங்கி தலைவர் இளையகுமார்
வந்தலை கூடலூர் கிளை கழக செயலாளர்கள்
சசிகுமார், ராமலிங்கம்
செல்வராஜ்,டேவிட் செல்லையா ஜான் கென்னடி மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.