அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி வட்டாட்சியரிடம் எம்.எல்.ஏ. மனு

0 509
Stalin trichy visit

திருச்சி, அக். 31  திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

துறையூர் மையப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கை மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றிட அமைத்திட வேண்டும் துறையூர் அரசு மருத்துவமனை சீர்கேடுகளை சரி செய்து தர வேண்டும் துறையூரில் நகரில் வீடு இல்லாத அனைவருக்கும் குடியிருப்பு கட்டி கொடுக்க வேண்டும் மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்றும் மலையப்பன் சாலை விநாயகர் தெரு கீழ குத்தி தெரு மற்றும் அனைத்து வார்டுகளிலும் மகளிர் பொது கழிப்பறை வசதி அமைத்து கொடுத்திட வேண்டுமென்றும் துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள சோடியம் விளக்குகள் பல வருடங்களாக எறியாமல் இருப்பதை உடனே சரி செய்து வழங்க வேண்டும் என்றும் ஃபுல் படம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னதுரை கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டம் இறுதியில் வட்டாட்சியர் அலுவலக நோக்கி பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் துறையூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மணுகளை அளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.