சாலை விபத்தில் உயிர்த்தப்பிய முதுகலை மருத்துவ மாணவர்

0 483
Stalin trichy visit

திருச்சி, அக். 31  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.சிறு காயத்துடன் உயிர்த் தப்பிய முதுநிலை மருத்துவக் கல்லூரி மாணவர்.

நாமக்கல் மாவட்டம் பட்லூர் சாலப்பாளையம் குடித்தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன்  யுவராஜ் (29). இவர் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் எம். எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.இந்நிலையில் சொந்த வேலையாக பெரம்பலூருக்கு செல்ல தனது காரில் திருச்சியிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். அப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற சிமெண்ட் லாரியை வேகமாக முந்திச் செல்லும் போது சிமெண்ட் லாரி மீது மோதிவிட்டு பின்னர் மற்றொரு லாரியின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டிச் சென்ற யுவராஜ் சிறுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மறு பிறவி எடுத்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.