மின்னல் தாக்கியதில் 3 கறவை மாடுகள் உயிரிழந்தன
திருச்சி, அக். 31 திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராசிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மூக்கன் மகன் செல்வராஜ். இவர் சொந்தமாக கறவை மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது வயலில் கட்டப்பட்டிருந்த மூன்று கறவை மாடுகள் மீது மின்னல் தாக்கியது இதில் சுருண்டு விழுந்த மூன்று பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனது.
இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருந்தக உதவி மருத்துவர் விவேகானந்தன் பலியான மாடுகளுக்கு சம்பவ இடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்தார். வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.