பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளி பலி

0 404
Stalin trichy visit

திருச்சி, அக். 31 திருச்சி மாவட்டம்,  துறையூர் தாலுகா கெம்பியம்பட்டி தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் மணிகண்டன் (30) நாமக்கலில் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கெம்பியம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (30), நல்லியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபு (29) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நாமக்கல் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா(28) அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் கலைச்செல்வன்(20) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து நாமக்கல், தா.பேட்டை வழியாக வாலிகண்டபுரம் செல்வதற்காக எதிரே வந்துள்ளனர். அப்போது துறையூர் – நாமக்கல் செல்லும் சாலையில் தேவரப்பம்பட்டி எம்.ஜி.ஆர் நகர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

இந்த விபத்தில் காயமடைந்த முத்தையா, கலைச்செல்வன், பிரபு, சரவணன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் துறையூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.